கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)
மலை உச்சியில் தீபம் இறைவனின் தெய்வீகக் காட்சி- இருளாய், இருட்டின் ஒளி. (751) வெள்ள பாதிப்பு ஆழ்ந்து பார்வையிடும் பகலவன்- புதையுண்ட குடிசை. (752) வியாபாரிகள் குமுறல் கடைவீதி எங்கும் வெள்ளம்- வேதனை, இழப்பீடு? (753) நகருக்கு அருகில் புதிய பேருந்து நிலையம்- பாழாகும் விளைநிலம். (754) விளம்பரம் இல்லாத தரம் உயர்ந்த அடுக்கு மாடிகள்- அடுப்பிலணை “பூனை”. (755) உறைந்த பனிக்கட்டி மலை உச்சியிலிருந்து அருவியாய்- மகளின் உயிர் “தாய்ப்பால்”. (756) கன்னி கழியாப் பெண் ஓராயிரம் ஏக்கப் பார்வை- சிலம்பு கழி நோன்பு? ...