கோவைப் பூ (1-25)

 வாக்கு செயலெல்லாம்

ஆதியுமாய் அந்தமுமாய் எனைக்

காப்பாய் கணபதியே.            (000)

 

இனிக்கும் வெல்லத்தில்

குழைந்தது புத்தரிசி. அடடே…

வந்தது… தைத்திங்கள்.           (001)

            

வேலை செய்வதோ கை

உடலின் எல்லா உறுப்புக்களும்

குடும்பத்தில் மனைவி.             (002)

 

தொட்டி நிறைந்த நீர்

குழாயில் வேகமாய் வெளியேறும்...

ஆடம்பர வாழ்க்கை?               (003)

 

வேலியில்லாத நிலம்

எதற்கெல்லாம் போட்டியும் வழக்கும்-

ஓ... தாவணி முறிப்பு.              (004)

 

அகம் மணக்கும் காதல்

அங்கத்தினர்களுக்குக் குதூகலம்-

மாங்கல்ய முடிச்சு.                   (005)

 

வீட்டிற்குள் அழுகுரல்

தெருவில் ஊளையிட்டது நாய்-

பாவம், கொத்தடிமை.              (006)

 

அணைக்கரை உடைந்ததும்

வெள்ளம் வராமல் அடைத்துவிட்டேன்

நிரந்தரமாய்க் 'கசிவு'.               (007)

         

வெளிச்சத்தை விரும்பி

போட்ட திரையையும் விலக்கினேன்-

நடுஇரவில் சுதந்திரம்?            (008)

 

உலகக் காட்சிகளை

கண்கள் மட்டுமா பார்க்கின்றன

கவிதைக்குள் 'கவிஞன்'.          (009)

 

விரும்பிக் கேட்டவைகள்

நிராகரிக்கப் படுவதில்லையே-

பாவம், தூண்டில் மீன்.            (010)

அண்டமெல்லாம் வண்ணம்

பொத்தானைப் பொருத்தே விளக்கு

சூரிய காந்திப் பூ.                     (011)

 

விழியின் ஓரத்தில்

ஓடங்கள்தான் மிதக்கின்றன-

விலைபேசும் 'துடுப்பு'.             (012)

 

அலங்காரமாய்க் கூவம்

நாற்றம் மட்டும் மாறவில்லை

கிராம 'மண்வாசனை'.             (013)

 

வானத்தில் மட்டுமா?

புவியெங்கும் நட்சத்திரங்கள்-

ஓ... மின்மினிப் பூச்சிகள்.         (014)

 

பனியின் முற்றுகையை

கதிரவன் மட்டுமா விலக்கியது?

நேரமாகத் 'தானாய்'.                (015)

         

வானத்து வயலில்

அள வெடுத்தா நட்டாள், நிலாப்பெண்-

நட்சத்திர நாற்று.                     (016)

 

அலைகள் ஓய்வதில்லை

கடலில் உப்புநீர் உள்ளவரை

ஓ... அரசியல் வாதிகள்?          (017)

 

வளர்ந்ததற்குக் கூலியும்

வளர்வதற்குத் துணையும் கேட்பர்-

வரதட்சணைப் பேய்கள்.         (018)

         

அழுகிய பழமாயினும்

அழகாய்ச் சுவைத்திடுவோம்; ஆனால்

எய்ட்ஸ் நோயாளி?                 (019)

 

வறுமைத் தாயின் கண்

ஒருமையில் நின்றது தனியாய்-

மீண்டும் ஒரு கண்ணகி.           (020)

         

உலக வீட்டிற்குள்

நாமெல்லாம் குடுத்தனக்காரர்-

விதையிலிருந்தே விதை.         (021)

         

வட்டியில்லாத பணம்

கேட்காமலே வலிந்து கொடுப்பர்-

திருமண அன்பளிப்பு.              (022)

அழுக்காகாத மலர்

காற்றில் அதன் கடைசி ஊர்வலம்

ஏக்கத்தின் முடிவு.                    (023)

         

வண்டுக்காய் இருக்கும்

பூவில் மகரந்தத் தூள்கள்-

காற்றின் திருட்டுத்தனம்.         (024)

 

ஆடை அலங்காரம்

வியர்வையினால் களையவில்லை; ஓ...

பாதுகாக்கும் 'பனியன்'.           (025)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (726-750)

கோவைப் பூ (226-250)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)