கோவைப் பூ (726-750)

 ஒத்திகை முடிந்தவுடன்

அரங்கம் அதிர ஆடுகிறாள்-

முழுநிலா அரங்கேற்றம்.         (726)

 

சாலையோரத்தில்

தினந்தினம் இன்னிசைக் கச்சேரி-

அட்சய பாத்திரம் பாழ்.           (727)

 

சில்லரை காசுக்காக

சாலையோரம் தவமிருப்பான்-

கரித்துண்டு ஓவியன்.              (728)

 

கோஷ்டி பூசல்களால்

ஒத்தியொத்தி வைக்கப்பட்டது-

அட… அமைதிப் பேரணி.      (729)

 

மலையகத்தின் இரத்தம்

உலகெங்கும் இரத்த ஆறு-

சிரிக்கிறது தேயிலை.              (730)

 

நொடிப்பொழுது பெருமழை

அனைத்து இன மதங்களும் சங்கமம்-

பரமபத வாழ்க்கை.                  (731)

 

பெருமழை வெள்ளத்தில்

யாருக்கும் தள்ளுபடியில்லை-

அரசனும் ஆண்டியாக.            (732)

 

விழுதுகளை நம்பி

கிளைகளை விட்டது ஆலமரம்-

பாவம், ஆலம் வேர்.                (733)

 

சுத்தமாய் வந்த நீர்

குப்பையாய் மீண்டு செல்லும்-

தத்திவரும் வெள்ளலை.           (734)

 

அடர்த்தியான காடு

கோலாகல இசைக்கச்சேரி

சருகுகளின் ஓசை.                    (735)

 

ஏழைக் குடிசையில்

நிறைவான கொண்டாட்டங்கள்

நடை பழகும் குழந்தை.           (736)

 

தூளியிலே அழுகை

தாழிட்டது கோபச்சேவல் –

தாலாட்டும் அத்தை.                (737)

 

காளையின் திமில்

கை மாறும் வெற்றிக் கோப்பை-

கண் கொத்திப் பாம்பு.             (738)

 

வேர்களை நம்பாமல்

விழுதுகள் ஊன்றும் ஆலமரம்-

விழுதெல்லாம் வேர்களா?      (739)

 

வரிசை மாறியதால்

நேராய்க் கடிக்கும் கட்டெறும்பு –

அட… சுரங்கப் பாதை.            (740)

 

காற்றில் பூவாசம்

வீடே குதூகலத்தில் இருக்கும்-

பூந்தோட்டக்காரன்?                (741)

 

போர்க்களமானதுக்கு

யாரும் எதிர்த்துப் பேசவில்லை-

ஏறுதழுவும் காளை.                 (742)

 

குளத்துப் படிக்கட்டில்

பசியாற்றிக் கொண்டிருக்கிறது-

பசியாற்றும் மீன்கள்.               (743)

 

வாடைக் காற்றின் சுகம்

எங்கும் சந்தனம் மணக்கிறது-

அட… புதுமனை புகுவிழா.     (744)

 

தளர்வோடு சென்றாள்

புத்துணர்ச்சியூட்டிய அன்னதானம்-

கருவறைக் கடவுள் யார்?        (745)

 

குடிசையின் ஓரம்

ஓரக்கண்களில் வலிக்கோடுகள்-

பசிக்காய் - பட்டது மரம்.        (746)

 

வளர்த்த கடனுக்கு

கேசாதி - பாதாதி கேசமாய் –

அஞ்சலிக்கும் உதிர்பூ.             (747)

 

கழித்த பொருளெல்லாம்

ஏழைக்குக் கூட்டலாகிறது-

தள்ளுபடி விற்பனை.               (748)

 

ஊருக்குள் படகு

அடர்ந்த பெருமழையின் கோபம் –

ஒன்றானது மதங்கள்.              (750)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (226-250)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)