கோவைப் பூ (126-150)
அணுக்களைப் பிளந்தாலும்
மூலக்கூறுகள்
பிரிவதில்லை-
அட.....
உன்னதக் 'காதலர்'. (126)
காலம்
மாறவில்லை
எந்தக்
கணவன் இறந்துவிட்டான்?
உடன்கட்டையேர்
விட்டில். (127)
தரையோடு
வெட்டினேன்
அடியில்
துளிர்விடத் தொடங்கியது-
வேரில்
மரபணுக்கள். (128)
மழை
நனைத்த பாதை
தூசு
படிந்தது,
விடிந்ததுமே...
பணிக்குப்
போ(கு)ம் தூசு. (129)
தலைகுனிவு
வாழ்வால்
கவலையா? வேண்டவே வேண்டாம்-
அறுவடைக்குகந்த
'நெல்'. (130)
செல்களின்
வீட்டில்தான்
மகிழ்ச்சியாய்
வாழ்கின்றது பாம்பு-
உயர்ந்த
மனிதர்கள். (131)
காலம்
மாறவில்லை
தீவிரவாதிகள்
அட்டூழியம்
நிணப்போர்வை
மக்கள். (132)
சேர்ந்தது
களிமண்
நிறம்மாறியது
தூயதண்ணீர்-
சவ்வூடு
பரவல். (133)
காலையில்
பூத்து
மாலையில்
உதிர்ந்துவிட்டதே மலர்
கல்லறைக்குள்
'மலர்கள்'. (134)
சுரங்க
நடைபாதை
வெறிச்சோடி
இருக்கின்றது;
அட...
சாலையில்
குருதி. (135)
சாய்வாய்
முளைக்கும் முடி
வளர்ப்பிலேதான்
நிமிரும் படுக்கும்-
ஐந்தின்
பலன் அறுபது. (136)
சுவற்றின்
அலங்காரம்
எல்லோர்
மனதையும் இழுத்தது-
பல்லிதரும்
முத்தம்? (137)
காற்றில்
காய்ந்துவிடும்
என்றெண்ணி
மூடிவிட்டேன்;
அட...
எதுகோலில்
'துவாரம்'. (138)
சிந்திக்கத்
தொடங்கி
சீக்கிரம்
அழிந்துபோக இருந்தேன்-
ஊருடன்
கூடி வாழ். (139)
குடிக்கும்
சிகரெட்டின்
நுனிச்சாம்பல், உதிர்த்தா உதிரும்?
பொதுவானது
'உயிர்விதி'. (140)
சிரிக்க
வைக்குமவர்கள்
உண்மையில்
சிரிக்கின்றார்களா-
திரை நட்சத்திரங்கள்? (141)
சாக்கடை
ஊர்வலத்தில்
உல்லாசமாய்க்
கொசுக்கடிகள்;
அட...
நோய்களின்
சின்னங்கள். (142)
சாடியில்
காகிதப்பூ
தேனை
உண்ணவா வரும் வண்டு-
காலம்
மாறிவிட்டது. (143)
விதவைக்குத்
தாலி
வரப்பிரசாதமாக
இருக்கும்,
கணவனாகக்
கோவலன். (144)
கோட்டைத்
தீர்மானம்
இரவில்தான்
நிறைவேறுகின்றது-
சாட்சியில்லா
வழக்கு. (145)
குடிசைக்குள்
கோபுரம்
பெருக்கப்படாத
குப்பைகள்
நம்பிக்கை
நாற்று. (146)
கோவலன்
கொலையுண்டதால்
கண்ணகி
கற்புத்தெய்வமானாள்-
மாதவி, விலைமகளா? (147)
குனிகிறேன்
பின் நெளிகிறேன்
நாணத்தால்
புனைந்து பொலிகிறேன்
பெண்ணாய்ப்
பிறந்துவிட்டேன். (148)
கையளவே
பந்து
ஆயிரக்கணக்கில்
ரசிகர்கள்-
விளையாட்டு
அரங்கம். (149)
மெல்லத்
தலைகுனிந்து
நிமிரும்போது....
ஆர்ப்பாட்டம்-
கருத்துகள்
கருத்துரையிடுக