கோவைப் பூ (201-225)
எங்கோ வெடித்தது வெடி
பறந்து
ஓடியது காக்கை-
வாழ்க்கை
- மௌன வெடி. (201)
தனித்தனிக்
குழுக்களாகக்
குளத்தில்
சேர்ந்தது மழைநீர்;
ஓ...
செம்புலப்
பெயல் நீரா? (202)
எங்கோ
வைத்த விரல்
என்காதைத்
துளைக்கும் செய்திகள்-
வளம்வரும்
தொலைபேசி. (203)
சமூக
அமுதசுரபி
இன்னும்
வற்றவில்லை. அடடே....,
நாட்டின்
'மக்கள்தொகை'. (204)
ஊறினாலே
துப்பத்
தேவையான
எச்சில் வரும்-
உள்ளத்துணர்வின்
பசை. (205)
தனித்தனி
முகவரிகள்
கட்டுக்குள்
ஒன்று சேர்ந்தன-
நாடாளு
மன்றம். (206)
ஊர்ந்துபோன
பெருமழை
தேர்ந்தெடுக்கப்பட்ட
இடத்தில்-
அடர்
வனப்பிரதேசம். (207)
தான்வாழ
இணையும்
மின்சாரத்தைத்
தொடமுடியா(து)-
நீரிறைக்கும்
கருவி? (208)
உலர்ந்து
உதிர்ந்த இலை
பாழுங்
கிணற்றுப் பிரதேசம்-
சிலந்தியின்
விசுவாசம். (209)
நீர்
நிறைந்திருந்தால் 'குளம்'
நீர்
குறைந்திருந்தால் 'குட்டை', அட...
வானம்
பொய்த்தாலோ 'திடல்'.(210)
உலவுகின்ற
நெய்யை
மத்தால்
கடைந்தாக்கும் ஆயர்-
வேதங்கள்
நான்கு. (211)
திக்கற்ற
வீடு
திருடன், திருடவா செல்கின்றான்-
பாழடைந்த
மாளிகை. (212)
உதிர்கின்ற
மலர்கள்
செடிக்கு
உரமாய் மாறுகின்றன-
உதிர்ந்தவிடத்துப்
பூ? (213)
தினம்
குனிந்துகுனிந்து
கேள்விக்குறியானது
முதுகு-
பணிவாய்
ஒலிபெருக்கி? (214)
உதிர்ந்த
சருகுகளை
ஆற்றங்கரையில்
வீசிவிட்டேன்-
எறும்பின்
நதிப்படுக்கை. (215)
ஏராளமாய்க்
கொடிகள்
எண்ணிக்கையில்லாக்
கடசிகள்
இரா(வில்)
விட்டில் பூச்சிகள். (216)
இன்றைய
மருமகள்
நாளைய
மாமியார்;
அட...
அடுப்படி
உபதேசம். (217)
தீராத
ஏக்கம்
திருப்புமுனை
வாசகம்;
அடடே...
கண்ணில்
நெருப்புத்துகள். (218)
ஈரமான
துணிதான்
பிழிய, அழுக்கை வெளியேற்றும்-
பெண்ணின்
அழுக்குமழை? (219)
துளிர்விடுவதற்காக
எத்தனை, இலைகள் சருகுகளாய்-
சமுதாயப்
புரட்சி. (220)
இருப்புப்
பாதையில்
பேச்சுவார்த்தை
வெற்றி பெற்றது-
இரயில்
தண்டவாளம். (221)
மோகக்
கூந்தலில்தான்
தாகம் பந்தல்
போடுகின்றது
குடிகாரன்
பேச்சு. (222)
இரைதேடுங்
கோழி
குப்பையைச்
சீரழிக்கின்றது-
முட்டைக்காய்
மக்கள். (223)
தூக்குக்
கயிற்றின் முடி
அவ்வப்போது
தளர்த்தப்படும்-
தண்டச்
சமுதாயம். (224)
இரவில்
ஆட்சிசெய்தவள்
விடிந்ததும்
ஓடிவிட்டாள்;
எப்படி?
கருத்துகள்
கருத்துரையிடுக