கோவைப் பூ (251-275)
நினைத்ததையே நினைத்து
நினைந்துருகும்
மக்கள் கூட்டம்-
மாவறைக்கும்
எந்திரம்? (251)
அந்தரத்தில்
மனிதன்
மேலும்
கீழும் ஆபத்து...
மகிழ்வான
'வாழ்க்கை'. (252)
நினைவுச்
சின்னங்கள்
யாருக்காக
எழுகின்றன-
நெஞ்சில்
ஓர் ஆலயம்? (253)
நீரைத்
தேக்குதற்கு
விளைநிலம்
பாழானது;
அடடா...
வறண்டுவிட்ட
ஏரி? (254)
அடங்காத
இதயம்
இமைகள்
மூடியும் அடங்கவில்லை...
கனவின் 'சிம்மாசனம்'. (255)
நீர்
தந்ததற்காகத்
தன்னையே
தியாகம் செய்யும்-
தோட்டத்து
'வாழை'. (256)
நூலாகும்
பருத்தி
செய்யும்
போதும் வீணாகும்-
பட்டறையில்
மரத்தூள். (257)
என்னமாய்
வளர்கின்றது
மனக்கற்பனையில்
குருத்து-அட....
இலைகளில்
செல்லரிப்பு. (258)
நெஞ்சில்
அக்கினிக்குஞ்சு
முரசு
கொட்டிச் சிரிக்கின்றது-
தன்மானத்
தாய்மகள்? (259)
பகடைக்காய்
ஆட்டம்
காயைப்
பக்குவமாய் நகர்த்தினேன்-
தாயம், அதன் கையில். (260)
ஒற்றுமையாய்
இருந்தது
வானத்தின்
மகிழாரவாரம்-
பாவம், மண்-மணலாய். (261)
பகலின்
சிதறல்கள்
பதுங்கியிருந்து
வெளியாகும்-
இரவு
நட்சத்திரம். (262)
பதர்தூற்றி
வெய்யிலில்
காய்ந்த
நெல் கோணிக்குள்;
ஆம்...
உழவனுக்காகப்
பதர். (263)
வானில்
பறவைகள்
ஒற்றுமையாய்ப்
பறக்கின்றதே-அட
வழி-மேடா? பள்ளமா? (264)
பதிபசு
பாசமெல்லாம்
சைவசித்தாந்தக்
கருத்துகள்-
உருண்டையாய்
'உலகம்'. (265)
பலநாள்
முயற்சியினால்
புல்லை
வட்டமிடும் மழைநீர்-
தீராத
தாகம். (266)
குளிர்ந்தால்
பனிக்கட்டி
விரிந்தால்
தன்னெடை குறையும் நீர்
கன்னியர்
ஆசைகள்? (267)
பவவழிப்
பாதைகள்
சேருமிடத்தில்
முள் குத்தும்-
மதிலின்மேல்
அரசியல். (268)
பாதம்
கடித்தாலும்
என்றைக்கும்
விடுவதில்லை;
அட...
நமைச்சுமக்கும்
செருப்பு. (269)
தென்னைக்கும்
நெற்கும்
ஏற்றத்தாழ்வு
அததற்கி(ல்)லை-
மனத்தளவே
வாழ்வு. (270)
பார்ப்பதற்கே
கண்கள்
கசங்கவும்
கசக்கவும் அல்லவே;
அட
அழுக்கில்லாத
கை. (271)
புதியதாக
வாங்கினேன்
அதற்குள்ளா, இப்படி கிழிந்தது-
முள்ளில்
சிக்கிய துணி. (272)
தோல்
செருப்பானாலும்
ஊசியால்
குத்தியே ஆகவேண்டும்
மழையும்
இடிமின்னலும். (273)
புதையல்
அகப்பட்டது
மகிழ்ச்சி, ஆனால் வெற்றுக்குடம்-
ஓ... காதலியின்
'மனம்'. (274)
புவியீர்ப்பு
விசையால்
புரளாமல்
இருக்கிறது நிலம்-
கருத்துகள்
கருத்துரையிடுக