கோவைப் பூ (276-300)
நாணத்தின் விளைச்சலால்
நல்வாழ்க்கை
கிடைத்துவிட்டது;
அட....
வானம்
பொழிகிறது. (276)
புள்ளியில்
நிறைவின்மை
எத்தனை
எத்தனை எழுத்திற்கு-
மனிதப்
பேராசை. (277)
பூத்திருக்கும்
சோலை
உண்டுருண்டு
செல்லும் வண்டுகள்-
கூந்தலில்
அழகாய் 'மலர்'. (278)
நான்கு
திசை வேதம்
பரம்பொருளே
மூல கர்த்தா-
புள்ளியில்
நிற்கும் கரு. (279)
பூ பூத்த
நேரம்
புவியெங்கும்
வெண்மை தெரிந்தது-
ஆந்தைக்குள்
'உலகு'. (280)
பெண்ணால்
வரும் சண்டை
உடல்முழுக்கச்
சிவப்புக் கண்கள்
வெகுளியாய்ச்
சிரிக்கும் அவள்?
(281)
இருண்ட
வீட்டிற்குள்
ஒளி(ர்)ந்திருக்கும்
மின்மினிப் பூச்சிகள்
விபச்சார
விடுதி. (282)
பெரிய
கல்லையுருட்டும்
கடப்பாறை
ஒரு நெம்புகோல்-
அடிதாங்கும்
சிறுகல். (283)
மகனை
விற்றுவிட்டு
மகளின்
நிச்சயதார்த்தம்;
அட...
கரம்பு
நிலத்தில் நெல். (284)
பகடைக்காய்
ஆட்டம்
வெற்றிதோல்வி
நிரந்தரமில்லை
வாழ்வில்
இன்பதுன்பம். (285)
மணலைச்
சீண்டிவிட்டேன்
காற்றில்
போருக்குப் போனது-
அடைக்கலம்
தந்தது மழை. (286)
மறுநாள்
உணவிற்காக
நுனிப்புல்
மேய்ந்தது ஆடு;
அட....
நம்ம
வழக்குரைஞர். (287)
பத்திரிகைப்
பூக்கள்
காலையும்
மாலையும் வரும்
வண்டுகளாய்
'வாசகர்'. (288)
மனதைத்
திருடினாலும்
மறைக்காமல்தான்
நிற்கின்றது-
கடைக்கூண்டில்
பொம்மை. (289)
மிகப்பெரிய
உருளை
சிறிய
கல் தடுத்து நிறுத்தும்-
எதற்கெடுத்தாலும்
'பெண்'. (290)
பல்
மறைக்கவா உதடு
சொல்
தவறினால் கடிபடும் நாக்கு
அழகே
ஆபத்து. (291)
மின்சாரப்
பெட்டியில்
எப்பவும்
சிவப்புநிற விளக்கு-
கன்னிகளின்
கண்கள். (292)
முதிர்ந்து
தான் உதிரும்
உதிர்ந்த
பின் புதியதாய் ஆகும்-
அட...
தென்னந்துடைப்பம். (293)
பிறருக்குத்
தன்னை
அர்ப்பணித்துக்கொண்டு
வாழ்ந்தேன்-
வாழை
மரமாய் 'நான்'. (294)
முந்திச்
சென்றாலும்
புகைமட்டும்
பிந்தியே செல்லும்-
வேகமாய்ப்
புகைவண்டி. (295)
மூக்கறுத்த
கத்திக்கு
முனையிலே
இரத்தம் மிளிர்கின்றது-
மனம் ஓர்
'கிளிக்கூடு'. (296)
முள்
குத்தியவுடனே
இரத்தமும்
அழுக்கும் சேர்ந்தே வரும்
முள்
நுனியில் அழுக்கு. (297)
மூக்கறுத்த
கத்தியின்
கூர்முனையில்
குருதி ஓட்டம்-
மூச்சு
நிற்கவில்லை. (298)
யாரும்
அழைக்காமல்
எப்படி
நான் மகாத்மாவானேன்-
மலரொடு
சேர்ந்த நார். (299)
விளைந்த
விளைச்சல்கள்
எப்பவுமே
வீணாவதில்லை
கருத்துகள்
கருத்துரையிடுக