கோவைப் பூ (301-325)
யார் கட்டியது சிறை
தென்றல்
பட்டதும் விழுந்துவிட்டதே-
கடப்பாறைப்
பெண்மனம்? (301)
வம்சங்களின்
இறகெலாம்
காற்றில்
பறக்கும் மலராச்சு-
காற்றுக்கெது
'வேலி'. (302)
பருக்களை
வேரோடு
கிள்ளி
எறிகின்றோம்;
முகத்தில்....
அழியாத
தழும்பு. (303)
வயிறே
வற்றினாலும்
வற்றாதே
மாநகர்ச் சாக்கடை-
அலங்கார 'ஊர்வலம்'. (304)
வாமன
அவதாரம்
பெயரைச்
சொல்லவில்லை;
அடடே
எறும்புக்கே
'சாதனை'. (305)
வானமெப்படியாயினும்
சூரியன்
வரத் தவறுவதில்லை-
குறுக்கே
'இடைத்தரகர்கள்'. (306)
வாய்மையே
வெல்லும்
ஆமாம்...
ஆயிரத்தில் ஒரு சொல்-
பொய்ப்பாராளுமன்றம். (307)
வான்திரை
ஓட்டைகள்
மோகக்
கவிக்கு நட்சத்திரம்-
வறுமைத்
தாவணிகள். (308)
விடுகதைக்
குடிசை
மின்மினிப்
பூச்சிகளாய் விளக்குகள்-
கல்லறையில்
தியாகி? (309)
விளக்கின்
வெளிச்சத்தில்
பல
உண்மைப் பிரதிநிதிகள்-
பொய்களின்
'முக்காடு'. (310)
சோறு
பொங்கியதால்
சோற்றுக்காச்
சொந்தம் சட்டி
குழம்புக்கும்
'சட்டி'. (311)
விளக்கைப்
போட்டதுமே
காணாமல்
போய்விட்டது இருள்
மின்சாரக்
கனவு? (312)
வெள்ளை
அடித்தசுவர்
தினந்தினமும்
கரும்புள்ளிகள்;
ஓ...
பால்காரன்
கணக்கு. (313)
நிலவுக்கும்
மூன்றுநாள்
எப்படியது
சாத்தியமாகும்
இன்று 'அமாவாசை'. (314)
வெள்ளையடித்த
சுவர்
ஒருநாள்
இரவு தூங்கிவிட்டேன்-
சுவர்
முழுக்க விளம்பரம். (315)
வேறுபட்டிருந்தாலும்
தற்காப்பில்
ஒன்றும் விரல்கள்-
அட...
தேர்தல் கூட்டணி. (316)
வெளிச்சமில்லாப்
பாதை
கொலைகளுக்குக்
குறைவே இல்லை-
எறும்புகளின்
ஊர்வலம். (317)
புள்ளிவைத்த
கோலம்
வண்ணம்
மட்டும் கொடுக்கவில்லை
அடியில், 'சிவந்த மண்'. (318)
விழுந்ததும்
ஒட்டியமண்
எழுமுன்
துடைக்கச் சென்றது கை-
ஒளியை
மறைக்கும் இலை. (319)
வானில்
பறவைகள்
ஒற்றுமையாய்ப்
பறக்கின்றன;
அட...
பாதையே
இல்லை. (320)
அழுக்குக்
கைக்குட்டை
துவைத்து
மீண்டும் பயன்பாட்டில்
பிணத்தின்
புத்தாடை? (321)
வாசிப்பிலே
படியும்
காற்றில்
பறக்கும் பனித்துளிகள்-
தேர்தலில்
பதுக்கல் பணம். (322)
குத்தும்போது
வலி
கூர்மையாகத்
தெரிகின்றது-
உன்னத 'ஐக்கூ'க்கள். (323)
வந்ததற்கு
அழுகிறாய்
நாங்களோ, வாழ்வதற்கே அழுகிறோம்-
அழுகை
மட்டும் 'பொது'. (324)
முகம் பார்க்கும்
ஆடி
உள்ளதை
உள்ளபடி காட்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக