கோவைப் பூ (376-400)
உள்ளொன்று வைத்து
புறமொன்று
காட்டும் உறவு
பக்குவப்படுத்திய
'தேன்'. (376)
குறுநில
மன்னர்கள்
பேரரசுக்குட்பட்டவர்கள்-
புள்ளின்
நுனியில் பனி. (377)
குடிக்கத்
தயாரான
பாலில்...
வந்துவிழுந்ததே ஈ-
திருமணத்தில்
ஜாதகம். (378)
விளக்கொளியில்
ஈசல்
மழை
சென்றுவிட்டதாய் ஐதீகம்
நேற்றுதித்த
காளான். (379)
காலையில்
நிழல்தரும் மரம்
மாலையில்
வெய்யில் தருகின்றதே-
திசைமாறும்
'சூரியன்?' (380)
காய்த்து
வளர்ந்தது செடி
முதிர்வில்
- காற்றின் பிள்ளையாய்?
அரசியல்
தலைவர்கள். (381)
மிதிக்கும்
கால்களுக்கு
மதிப்புமிகத்தரும்
மிதியடிகள்
வாயிற்படிக்
'காவலன்'. (382)
கள்ளச்
சாராயம்
காசுக்குத்தான்
கிடைக்கிறது -
மாடியாகும்
குடிசை. (383)
கருவில்
வளர்கின்ற
குழந்தைக்குச்
சோர்வேயில்லை-
இளமைச்
சித்தார்த்தன். (384)
கற்றாழையில்
முள்
குத்தவும்
குளிரவும் செய்வதுண்டு
இல்லத்தில்
'மனைவி'. (385)
கண்ணாடி
வளையல்
அலங்கோலமாய்
உடைத்துவிட்டனரே-
சிரிக்கும்
'வெண்ணாடை?' (386)
ஒன்றில்
உருவாகி
மற்றொன்றில்
கலவாதது;
அட...
நிறமாலைக்
கதிர்கள். (387)
வானில் 'உதயசூரியன்'
பார்த்ததும்
கூசிப் பின் தெரிவான்
கற்றோர்தம்
'நட்பு'. (388)
ஓடையின்
குறுக்கே
கல்லொன்று
இருந்தது;
அடடே...
பிரிந்து
சென்றதே நீர். (389)
எழுதுகோலை
மூடினேன்
காற்றில்
உலர்ந்துவிடுமென்றெண்ணி-
எழுதுகோலில்
துவாரம். (390)
கரைகின்ற
காகம்
பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்பும்
பல்சமய
விருந்து. (391)
எரியாத
விளக்கா
எண்ணையும்
திரியும் மாற்று-
அட...
தத்துப்பிள்ளை. (392)
எச்சில்
பூக்களையும்
பூசைக்குப்
பறித்துவிட்டார்கள்-
அட...
விதவைத் திருமணம். (393)
பல்லாயிரம்
பூக்கள்
இருந்தாலும், பூபாளக் 'குறிஞ்சி'
வீட்டோடு
'மருமகன்'. (394)
ஊர்வலத்தில்
நடந்து
ஊர்வலத்தை
நடத்திவைக்கும்-
புயலின்
நடுவே 'மரம்'. (395)
உல்லாசப்
பறவை
வரும்
புயலால் திசைமாறும்-
நெருப்பில்
விழுந்த புழு. (396)
ஏழ்மையின்
சின்னம்
எதுவென
கண்டுபிடித்துவிட்டேன்
ஓ...
அடுப்புப்பூனை. (397)
உதிர்ந்தால்
மட்டுமல்ல
செடியிலேயே
வாடும் மலர்கள்-
பருவ
மங்கையர்? (398)
உடலின்
நாளங்களில்
குருதியின்
வேலைநிறுத்தம்...ஆ
உதட்டில்
அட்சரேகை. (399)
காலில்
புதுச்செருப்பு
கடித்தாலும்
விடமாட்டார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக