கோவைப் பூ (401-425)
இருளை விரட்டிடவே
விளக்கைப்
போட்டேன்;
விலகியது-
இக்கட்டில்
'ஆந்தை'. (401)
இரவில்
மட்டுந்தான்
நடைபாதை
வாசி - பகலில்
கட்டிடத்
தொழிலாளி. (402)
ஏழையின்
நாக்கே
இந்தியாவின்
உன்னத 'சகாரா'
குளிர்ப்பெட்டி
வாசிகள். (403)
ஆழமாய்
நேராய்த்தான்
புதைக்கப்பட்டது
பூமிக்குள்-
சாய்ந்திருக்கும்
'தென்னை'. (404)
ஆடம்பர
வீட்டின்
நுழைவாசலில்
வறுமைக்கோடுகள்-
நாட்டில்
- உழைப்புறிஞ்சிகள்.(405)
வானத்தில்
மட்டுமா
நிலத்திலும்
வாழ்கின்றன - கழுகுகள்
அரசியல்
தலைவர்கள். (406)
அழியும்
போது தான்
சுடர்விட்டெரியும்
மெழுகுவர்த்தி-
முதிர்ந்து
உதிரும் இலை. (407)
அலாங்காரமாய்க்
கூவம்
தேர்தல்
வந்துவிட்டது;
அடடே...
தொண்டனாகத்
தலைவன். (408)
பூவோடு
சேர்ந்த
நாரும்
மணக்கத்தான் செய்யும்
ஓ...
கற்றுச் சொல்லிகள். (409)
அணை
கட்டாதவரை
அனைவருக்கும்
உரியது ஆறு-
கழுத்தில்
மங்கல நாண்? (410)
அங்காடியின்
அழகு
எல்லோரையும்
கவர்ந்துவிட்டது-
அட...
காலில் செருப்பு. (411)
அந்தரத்தில்
மனிதன்
மேலும்
கீழும் ஆபத்து-
வாழ்க்கையில்
மகிழ்ச்சி. (412)
அலைமோத
கட்டினேன்
புயலில்
தரைமட்டமானது - ஓ...
கரையில் 'மணல்வீடு'. (413)
செம்புலப்பெயல்நீர்போல்
அன்புடை
நெஞ்சம் தாம் கலந்தன
ஓ...
சவ்வூடுபரவல். (414)
அழுக்காய்க்
கரைகின்றது
அழுக்கை
நீக்குகின்ற சோப்பு-
குடும்பத்தில்
'பெண்கள்'. (415)
ஆத்திரக்காரன்
தான்
பொறுமைக்கு
இலக்கணம் வகுத்தான்-
வற்றிய
கிணற்றில் 'நீர்'. (416)
முகவரியைத்
தேடும்
முகவுரை
பெற்ற காதலி;
ஓ...
பாற்கடலில்
'அமிர்தம்'. (417)
இரயிலின்
தலைவிளக்கு
வளையாத
நீள் பாதையில் ஒளி-
முயற்சியின்
வெளிப்பாடு. (418)
இரவை
விரட்டிடும்
வீதியோர
மின்விளக்குகள்;
அட...
தடங்களுக்கு
வருத்தம். (419)
பாதை
ஓரத்தில்
விரசங்கள்
விலைபேசப்படும்
பாவம், வறுமைத்தாய். (420)
இல்லாத
அழுக்கைச்
சேர்த்தே
கொண்டுவரும் குருதி-
நுனி
முள்ளில் அழுக்கு. (421)
உணர்வின்
நம்பிக்கை
பிம்பங்கள்
உண்மையாகும்-
திரையரங்கத்துள்
'நான்'. (422)
மாட்டுச்
சந்தையில்
ஆளாளுக்கொரு
விலைப்பேச்சு
மணக்காலத்தில்
'பெண்'. (423)
உயிர்தரும்
வேருக்கு
உதிர்ந்து
உரமாகும் இலைகள்-
நன்றி
உள்ளது 'நாய்'. (424)
உள்ளே
புழுங்குவதைப்
புகையாக, வெளியே காட்டும்-
அட...
செங்கற் சூளை. (425)
கருத்துகள்
கருத்துரையிடுக