கோவைப் பூ (426-450)
எமன் வீட்டு வாசலில்
மங்கலவிழா
நடைபெறுகின்றதே-
சுடுகாட்டில்
'திருமணம்'. (426)
எங்கும்
வெற்றுத்தாள்
செய்திகளைச்
சுமந்த பிறகு-
முகம்
தேடும் கடிதம். (427)
எதுவாயினும்
பிரித்துப்
பார்த்து
வாங்குகின்ற போது
ஓ...
பெண்களை மட்டும்? (428)
குண்டு
கலாச்சாரம்
குழிதோண்டி
புதைக்கப்பட்டது
குழியில்
'கம்ப்யூட்டர்'. (429)
எல்லாம்
முடிந்துவிட்டது
நிம்மதியாய்
இருக்க எண்ணினேன்-
நெஞ்சில்
ஒரு நெருஞ்சி. (430)
என்ன
ஆச்சர்யம்
அரசியல்
கட்சிகள் என்னவானது?
அடுப்பிற்குள்
'பூனை'. (431)
புத்தகத்தில்
ஈக்கள்
கூட்டங்கூட்டமாய்
மொய்க்கின்றன
நிர்வாணச்
சித்திரம். (432)
ஒதுக்கி
வைத்துவிட்டுப்
பின்
தேடினேன்,
கிடைக்கவேயில்லை-
சிப்பிக்குள்
முத்து. (433)
கடலில்
மட்டுமா அலை?
தண்ணீருள்ள
இடமெல்லாம்;
அட...
குப்பிக்கேற்ற
மூடி. (434)
அங்காடி
வாயில்
விற்பனைக்கு
விளம்பரச் சிலைகள்
மணச்சந்தையில்
'பெண்'. (435)
கதவைத்திற
- மின்னல்
வெளியில்
வந்தால் - இடி;
அடடே...
வாழ்க்கை, இடி-மின்னல். (436)
கவலை
கொள்ளவில்லை
அசோகவனத்தில்
சீதை;
அட...
ஏமாறும் 'இராவணன்'. (437)
விளக்கேற்ற
வந்தவள்
விளக்காக
எரிகின்றாளே
அழுகின்றது
'எரிவாயு'. (438)
கனிகளின்
நல்லாக்கம்
மரத்தின்
நடுவில் கரும்பாதை-
உதிரும்...
பொய்ச்சோறு. (439)
காலில்
பட்டது நீர்
காய்வதற்குள்
எத்தனை மண்துகள்-
வாழ்க்கை, காற்றின் அலை. (440)
ஏழு
பிள்ளைகள்
ஒரே
தாயின் வயிற்றில் பிறந்தனர்
நிறமாலைக்
கதிர்கள். (441)
காற்றில்தான்
தீயும்
பிரகாசமாகச்
சுடர்கொடுக்கும்-
உடலும்
உயிரோடு. (442)
குட்டையில்
எருமை
படுத்துக்கொண்டு
இருக்கின்றது-
பணத்துக்குள்ளே
'மனம்'. (443)
ஆத்மாவின்
கண்ணீர்
உடலுக்கு
நிம்மதியைத் தரும்
கோடைக்கால
'மழை'. (444)
கூட்டமாய்த்
தேனீக்கள்
பறந்து
வந்தன;
ஏமாற்றம்-
சாடியில், காகிதப் பூ. (445)
கேள்விக்
குறியாய் நான்
கண்கள்
குருடாய்ப் போனதாலே-
காட்டாற்று
வெள்ளம்? (446)
கட்சித்
தலைவர்கள்
தொகுதியில்
ஈயாய் மொய்க்கின்றனர்.
அடடே...
இடைத்தேர்தல். (447)
கொத்துகொத்தாய்ப்
பூக்கள்
கொடியில்
அழகாய் மிளிர்கின்றதே-
ஓ...
கூட்டுக்குடும்பம்? (448)
சமுதாய
வானில்
மின்னலா
கதவைத் தட்டுகிறது?
இன்னலில்
வருவதே இடி. (449)
பாராளுமன்றத்தில்
அண்ணாவின்
சுருக்கமான உரை
கருத்துகள்
கருத்துரையிடுக