கோவைப் பூ (501-525)
விதையில்லையாயினும்
கிளையினாலே
வெற்றிலைக்கொடிகள்-
நல்ல
சமுதாயம். (501)
தொழிற்சாலையில்
கை
வேலை
செய்தால்தான் ஊதியம்
கால்
காக்கும் 'செருப்பு'. (502)
விளைச்சலைப்
பெருக்குவதற்கு
விரல்
இடுக்கில் புகைகிறது புகை-
புகைகின்றது
'நெஞ்சு'. (503)
வேகமாய்ச்
செல்கிறதே
சிதறல்கள்
இடமாற்றம்;
அட...
சாலையில்
பேருந்து. (504)
அமாவாசை
நாளில்
வானமும்
பூமியும் நண்பர்கள்-
எரியாத
விளக்குகள்? (505)
அழகாய்
நாற்காலி
உட்காருவதற்குப்
போட்டி-
நசுங்கியது
'எறும்பு'. (506)
என்
நாட்குறிப்பேடு
நினைவுகளை
மலரச்செய்தன
மக்கிப்போன
'தாள்'. (507)
அறம்பொருள்
இன்பமெல்லாம்
வீடு
பேற்றில் கண்டுவிட்டேன்-
ஒப்பாரி 'மனைவி'. (508)
ஆத்மாவை
எழுப்பு
நிச்சயம்
தவறுகள் விடுதலைபெறும்-
உனக்குள்
ஒருவன். (509)
மேய்வதாய்ச்
சொன்னார்கள்
ஓடிச்சென்று
பார்க்கின்றேன்
மணிலா
வயலிலாடு. (510)
இரயிலின்
நெம்புகோல்
வெளியே
தெரிந்தாலும்-சக்கரம்
தண்டவாளத்தில்
தான். (511)
இராட்டையில்
பருத்தி
நெசவாளர்
கொடுத்தார் ஆடை-
கடைசியில், தாய்க்கு மகன்? (512)
எதிர் எதிராய்
இருந்தும்
துன்பம்
வர... சேர்ந்தே சாகும்
கிளையில்
பச்சிலைகள். (513)
இனிப்பே
காட்டும் தேன்
உள்ளுக்குள்
கசப்பையும் தரும்-
போலி
மனிதர்கள். (514)
உணவுக்குப்
பிறகுநீர்
செரிமாணம்
நன்றாய் நடக்கும்-
நாற்று
நட்ட வயல். (515)
அடங்காத
இதயம்
இமைகள்
மூடியும் அடங்காது
சிம்மாசனக்
'கனவு'. (516)
உயிர்ப்பிணங்களைப்
புதைக்கும்
மனிதன்
வயிறே 'சுடுகாடு'-
கொல்லாமைக்
கொள்கை? (517)
உன்னதமாய்ச்
சித்திரம்
உன்னிப்பாய்க்
கவனித்தேன்;
அட...
ஆழப்
பதிந்தது 'மனம்'. (`518)
சிலரின்
ஆவேசம்
புதிய
வீடும் எரிகின்றது
இரவில் 'தேன்கூடு'. (519)
எங்கெங்கு
வெளிச்சம்
இருள்மாறினாலும்
அரசாட்சி-
மரப்பொந்தில்
'பாம்பு'. (520)
எத்தனை
கட்டைகள்
எவ்வளவு
சல்லிக்கற்கள்-
இரயில்
தண்டவாளம். (521)
எழுதுகோலின்
மூடியில்
எழுத்து...
பொறிக்கப்பட்டிருக்கும்
வீட்டில்
பெயர்ப்பலகை. (522)
எல்லா விதைகளுமே
பக்குவமாக
முளைக்கின்றது-
எஜமானனின்
கட்டளை. (523)
என்ன
ஆச்சர்யம்
காலில்
மட்டுமல்ல செருப்பு-
முடவன்
விரல் இடுக்கில். (524)
ஒற்றுமையாய்ப்
பறவைகள்
எப்படி? வானில் பறக்கின்றன?
கருத்துகள்
கருத்துரையிடுக