கோவைப் பூ (51-75)

 இலை, சருகானாலும்

உரமாய் மதிக்கப்படுகின்றது

பொதுத்தேர்வில் மாணவர்?   (051)

 

பெட்டி முழுக்கப் பணம்

பூட்டைப் போட்டுத்தான் மூடினேன்-

சுட்டது அகல்விளக்கு.             (052)

 

உடுத்தாத ஆடை

பேழையில் காட்சிப்பொருளாய்

ஈரமாய் மணல்வீடு.                 (053)

 

புனலிக்கொடி வீழ்ந்து

மணலை அலங்கரித்து இருக்கும்-

தொடுக்க இ(ல்)லையே நார்.  (054)

 

உரம் போட்டு வளர்த்தேன்

நன்றாய்த்தான் வளர்ந்தன மரங்கள்-

அடடே..... விறகுவெட்டி.        (055)

 

பூக்களில் மகரந்தம்

வண்டின் துணையால் மீண்டும் பூ-

ஓ... கள்ளக்காதல்?                   (056)

 

உடைந்ததே தண்ணீர்க்குடம்

பள்ளமான ஓட்டுக்குள் நீர்

அரசியல் கட்சிகள்.                   (057)

 

புயல் காற்றினாலே

பாதை எதுவென தெரியவில்லை-

குத்தி நின்றது முள்.                  (058)

 

உயர வளர்ந்தாலும்

தென்னைக்கு மண்ணில் உணவு

தாய்க்கென்றும் பிள்ளை.        (059)

 

புல்லாங்குழல் மட்டுமா

எதுவெல்லாந் தருகிறது மூங்கில்-

கூடைக்குள் தேசம்.                 (060)

 

அரிசி மூட்டைகள்

பசியோடு காவல்காரன்

உல்லாசமாய் 'எலிகள்'.           (061)

 

பிறந்தவுடன் ஊமை

வளர்ந்த பின்பு குருடனாய்-

நன்றி உள்ளது நாய்.               (062)

 

உயரே வாழ்ந்தாலும்

தேய்காய் கீழே விழவேண்டும்

சமத்துவம் பேசும் 'மண்'.         (063)

 

பிறவிப்பயன் பெற்றதாய்ப்

பேசிக்கொண்டது கூர் அரிவாள்-

களத்தில் நெல்மணிகள்.          (064)

 

உள்ளதிலே ஒன்றி

உயிர்வாழும் ஒழுக்கமுடையவர்

ஒட்டுண்ணி மனிதர்.                (065)

 

பழசான காற்றில்

சாக்கடையின் விவகாரங்கள்; உம்...

நகத்துக்குள் அழுக்கு.              (066)

 

புலிகள் பதுங்குவதால்

கோழைகளென்று கருதவேண்டாம்-

அட... உத்தமத் தலைவன்?     (067)

 

பழுத்து இனிக்கும் பழம்

வீணாகாமல் பார்த்திருப்போம்-

மூலையில் தாத்தா?                 (068)

 

உள்ளழகை மறைத்து

கண்ணுக்கு மையழகூட்டுவர்

தலையில் வலி நிரந்தரம்.        (069)

 

பயன்படுத்தப்பட்டது

அடைவில் வீணாய்த் தூங்குகிறது-

துருபிடித்த கத்தி.                      (070)

 

பரந்த ஒற்றுமை

பிரியும்போது தனிக்குழுக்கள்-

சொட்டும் மழைத்தண்ணீர்.     (071)

 

ஊளையிட்டது நாய்

இன்னொரு ஜாலியன்வாலாபாக்

குண்டு கலாச்சாரம்.                 (072)

 

படித்தேன்; அடிக்கோடு

சில இட்டு மூடினேன்; பிரித்தேன்-

வரிகளே என்பாடம்.                (073)

 

தேனுண்ட வண்டு

பூவருகே மயங்கி விழுந்தது-

பூக்களின் அரசாட்சி.                (074)

 

பணத்தோட்டம் அழிந்தது

உள்ளே புகுந்தது குள்ளநரி-

பிணத்தின் மீது  ''.                 (075)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)