கோவைப் பூ (576-600)
பாலம் அமைக்கின்றதே
விண்ணை
முட்டும் கோபுரங்கள்-
மண்ணில்
ஊன்றும் கால். (576)
புத்தகப்
பேழையில்
சருகான
புத்தகங்கள்;
அட...
பழைய
புத்தகக்கடை. (577)
துப்பிய
எச்சில் என்
காலையே
அசிங்கமாக்கியது
தன்வினை
தன்னைச்சுடும். (578)
புள்ளின்
வைரத்தலை
பனித்துளி
மட்டுமா தருகிறது?
வாய்க்காலில்
தண்ணீர். (579)
பூமியில்
விண்மீன்கள்
நேரத்துக்காயிரம்
வண்ணம்-
கன்னிகளின்
கண்கள். (580)
எங்கிருந்தோ
செடியை
வீட்டிற்குள்
கொண்டுவந்துவைத்தேன்
வற்றியது
'கிணறு'. (581)
பேருந்து
நிலையம்
தேசியத்தின்
ஒருமைப்பாடு-
நிலைக்கு-முன்-செருப்பு. (582)
மரமாய்
நடவில்லை
பொய்களின்
நடுவில் உண்மைகள்-
மரத்தின்
கிளையில் பனி. (583)
புத்தக
அட்டைப்படம்
புத்தகப்
பொருளை உணர்த்துகின்றது
மணப்பெண்
அலங்காரம். (584)
மனுநீதிச்
சோழன்
குற்றத்தை
மட்டுமா கண்டான்-
நீதிக்குத்
தண்டனை. (585)
முகவரி
கொடுப்பதற்குள்
பாவம், முகவுரை கிடைத்துவிட்டது
ஓ...
கள்ளக்குழந்தை. (586)
காட்டுக்குள்
விலங்குகள்
வேடிக்கையாய்ப்
பார்க்கின்றன
இரயில்களின்
முத்தம். (587)
ஆன்மாவை
எழுப்பு
எதையெல்லாம்
பேசும்பார்-
உங்களிடமும்
'ஐக்கூ'. (588)
முழுதாய்
அனுபவித்து
தெருவினில்
வீசி விடுகின்றோம்-
அடிப்பாக
'சிகரெட்?' (589)
மூளைச்
சலவையில்
முக்கியமான
உரை எழுதினேன்-
மூடிய
தபால்பெட்டி? (590)
கோழி
மிதிப்பதாலா
செத்துவிடுகின்றது
குஞ்சு. அட
கர்ப்பத்தில்
குழந்தை? (591)
யார்
தொடங்கி வைத்தது
முடிவில்லாத
ஊர்வலம்;
அட...
தேன்
சிந்திய 'உலகம்'. (592)
வரிசையாய்க்
கம்பம்
உச்சியில்
எரியும் மின்விளக்கு-
தரையோ
மேடுபள்ளம். (593)
விறகின்
தீக்குளிப்பை
அடுப்பு
ஏற்றாலும்.. ஏற்கா(து)
நிணப்போர்வை
'மனிதன்'. (594)
வாளின்
செயற்பாட்டால்
இரண்டாக்கப்படுகிறதே
மரம்-
உதிரும்
மரத்தூள்கள். (595)
விரட்டியது
தேனீ
பறக்கும்போது
உதிர்ந்தது மலர்-
முடவன் 'கைக்கொம்பு'. (596)
அதிகாரி
வந்து
வீட்டைச்
சோதனை செய்கின்றார்
உடலில்
வியர்வைத்துளி. (597)
வீசிய
சிகரெட்டின்
நெருப்பால்
எரிந்தது மாவீடு-
ஓ...
கண்ணகி வழக்கு. (598)
வேடிக்கை
உலகம்
வேதனை
வாமன அவதாரம்-
சிற்றெறும்புச்
சாதனை. (599)
உயரப்
போவதற்கு
உடல்
முழுக்க வடுக்களைத் தாங்கும்
ஓ...
தென்னங்கீற்று. (600)
கருத்துகள்
கருத்துரையிடுக