கோவைப் பூ (651-675)

 

வாழ்க்கையின் தத்துவம்,

கூட்டலும் பெருக்கலும் கழித்தலுமாம்

வியாபாரச் சந்தை.                   (651)

 

சுகமாகத் தூங்கினேன்

தூக்கத்தில் எறும்பு கடித்தது-

உதட்டோரம் வீக்கம்.              (652)

 

சிதறிய ஒருதுளித்தேன்

எங்கு இருந்து வந்தன இவை-

வட்டமிடும் எறும்பு.                 (653)

 

புண்ணாக்கெண்ணையாய்

நிலக்கடலையைப் பிரித்தெடுத்தேன்

ஓ... மூலக்கூறுகள்.                  (654)

சகாராப் பாலைவனம்

இந்தியாவில் நிறைந்திருக்கின்றன-

ஏழையரின் 'நாக்கு'.                 (655)

 

கோடைக்காலத்தில்

பழுத்த இலைகள் உதிர்ந்துவிட்டன-

அடுத்து வளரும் 'துளிர்'.          (656)

 

உயர்ந்த தென்னைமரம்

பூமியைப் பார்த்து சிரிக்கின்றது

வீட்டைப் பெருக்கும் 'கை'?    (657)

 

கை சுத்தமானாலும்

நகத்திற்கு இடையே அழுக்கு-

எண்ணையோடு திரி.              (658)

 

கூட்டுதலும் கழித்தலும்

பின் பெருக்குதலும் பொதுவானவை-

வாழ்வின் தத்துவங்கள்.           (659)

 

ஒரே  நிறத்தில் இரத்தம்

எண்ணங்கள் மட்டும் வேறு

சாதிச் சமுதாயம்.                      (660)

 

குப்பையானாலும்

நீண்ட வரலாறு பேசும்-

மக்களாட்சி நாடு.                     (661)

 

காற்றின் திசையில் தான்

இலைகள் உதிர்ந்துதிர்ந்து போகும்-

அலைபாயும் கண்கள்.             (662)

 

உணவு உள்ளவரை

அசைபோட்டுக் கொண்டே இருக்கும்...

பாலைவன ஊர்தி.                   (663)

 

காலில் புதுச்செருப்பு

நாட்பட்ட, பாத அடிச்சுவடுகள்-

நினைவுச் சின்னங்கள்.            (664)

 

காட்டிலும் பிரச்சனைகள்

சருகுகள் எருவாய் ஆவதற்கு-

வானம் பொய்த்துவிட்டது.      (665)

 

ஆண்டுக்கு ஒருமுறை

குடிபெயரும் அணைக்கரை வாசிகள்

நிரந்தர மின்னல்கள்.               (666)

 

கழித்ததை உண்டாலும்

மறவாமல் நன்றி கூறும்-

பிணத்தின் மீது ''.                  (667)

 

கயிற்றின் முனையில் கல்

அதிவேகமாகச் சுழலுகின்றது-

தனக்குள் ஒரு வட்டம்.             (668)

 

ஒதுக்கப்பட்டவர்களால்

எழும் வானுயரக் கோபுரங்கள்

தொலைதூர 'தரிசனம்'.           (669)

 

கண்ணகிச் சிலை அருகே

கரித்துண்டின் சிதறல்கள்; அட...

கணக்கு எழுதும் கை.              (670)

 

ஒவ்வொன்றாய்ச் சேர்ந்தது

குளியலறையில் தலைமுடிகள்-

தேங்கிவிட்டது 'தண்ணீர்'.      (671)

 

தேக்கு நேர் ஆக

பக்கக் கிளைகளைக் களையவேண்டும்

ஊருடன் கூடி வாழ்?               (672)

 

என்ன ஆச்சர்யம்

சாக்கடையில் நல்ல தண்ணீர்-

பன்னீர் போட்ட 'முகம்'.          (673)

 

எழுதவே பேசும்கோல்

எழுதியதும் பேசாதிருக்குமா?

திருமணத்தில் பெற்றோர்.       (674)

 

வேகம் விவேகமல்ல

மருத்துவமனையில் உபதேசம்

குலை தள்ளிய வாழை.            (675)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)