கோவைப் பூ (701-725)
இரவெல்லாம் காவல்
திருடனை எப்போதும் பிடிப்பதில்லை-
வீணாய்த் தெருவிளக்கு. (701)
நிழலல்ல உண்மை
துன்பம் மறக்கும் இன்பம் எது?
குழந்தையின் சிரிப்பு. (702)
திறக்கப்பட்டது அணை
சீரிப் பாய்ந்தது வெள்ளம்...அட!
திருந்திய சமுதாயம். (703)
சொந்தங்களைத் துறந்து
பந்தங்களுக்காக வாழ்பவள்...
சொந்தபந்தம் = மனைவி. (704)
சுடரோட்ட வீரர்
ஊரெல்லாம் வரவேற்பு... அட!
மந்திரி கையில் சுடர். (705)
தொலைத்துவிட்ட இடத்தில்
தொலைந்ததைத்தான் தேடினேன்
கிடைத்தது மாற்றுப்பொருள். (706)
கால்வலிக்கத் தேடினேன்
தொலைத்தது கிடைக்கவில்லை
மாறிப்போனது
"மனம்". (707)
மனம் விரிந்து பறந்தது
உலகம் யாவும் பொதுவுடைமை
இலேசானது நெஞ்சம். (708)
அறுவடைக்குத் தயாராய்
தலைகுனிந்து நிற்கின்றது நெல்...
தாகம் தீர்த்த மழை. (709)
வீதியில் நடந்தவர்கள்
பாதுகாப்பாக வீட்டிற்குள்...
குரங்கின் படையெடுப்பு. (711)
வீரன் அடையாளம்
தமிழர்களின் விளையாட்டுக்கள்.
அட... ஜல்லிக்கட்டு? (712)
மனிதன் தனக்காக
போட்டுக்கொண்டது சட்டம். அட....
மாடுபிடி ஆட்டம். (713)
அழகாய்க் கொலுசு ஒலி
கூட்டுச் சேர்த்துக்கொண்டது...அட...
மணப்பெண்ணிடம் 'மெட்டி'. (714)
கோபம் வரவில்லை
சீட்டைக் கிழித்து
விட்டார்
பேருந்து நடத்துனர். (715)
செம்புலப் பெயர்நீர்போல்
கலந்த அன்புடை
நெஞ்சங்கள்
கோவைமணி சாந்தி (716)
இடுப்பில்
சுருக்குப்பை
பத்திரமாகப்
பார்க்கிறது
அட… கீரைக்காசு. (717)
மரவெட்டியான் கோடரி
மரத்தை மட்டும்
வெட்டுகிறது
பாவமாய் தரையில்
கனி. (718)
மண்டப நுழைவாயில்
பேதமில்லாமல்
வரவேற்கும்
நெகிழிப் பொம்மைகள். (719)
தெருவோரமாய்
ஓவியம்
சில்லரை ரசிகனாக
ஓவியன்?
ரசிக்காத ரசிகர். (720)
அழவும் முடியவில்லை
அழகான உதட்டுச் சாயம்
வீதியில் திருநங்கை. (721)
எல்லை தாண்டாமல்
மேய்ந்துகொண்டிருக்கிறது
ஆடு-
தூணில் கழுத்து
நாண். (722)
நேற்றைய மலர்தான்
சந்தையில்
இன்று அமோகம்-
வியாபாரியின்
யுக்தி. (723)
இளைஞர் பட்டாளம்
ஏக்கம் நிறைந்த
வரிசையில்…
அட… இளவட்டக்
கல். (724)
காய்ந்துதிர்ந்த
சருகுகள்
அவ்வப்போது
திசைமாறும்-
கருத்துகள்
கருத்துரையிடுக