கோவைப் பூ (76-100)
ஊற்றுள்ள கிணறு
எடுக்க
எடுக்கக் குறையாது
ஆற்றிலும்
அளந்துபோடு. (076)
நேராய்த்தான்
வைத்தேன்
சாய்ந்து
வளர்கின்றதே தென்னை-
நிமிராது
நாய்வால். (077)
எண்ணத்தின்
சமையல்
வாழ்க்கையாய்
மிளிர்கின்றது;
அட...
அச்சடிக்காத
நூல். (078)
நேராய்
முளைத்தது செடி
வளர்ச்சியில்
எத்தனை கோணல்கள்-
மனிதச்
சமுதாயம். (079)
பயணப்
படகுக்குத்
துடுப்பு
துரோகம் செய்தது. அட...
கட்டைவிரல்
எங்கே? (080)
நுழையாத
காடு
எழுபத்தீராயிரம்
மரங்கள்-
உடலுக்குள்
நாடி. (081)
எண்ணமாய்
வளர்கின்றது
மனக்கற்பனையில்
குருத்து;
அட...
இலைகளில்
செல்லரிப்பு. (082)
நுனாவும்
பூத்ததுவே
வண்டு, மதுவுண்டு களித்தது-
தனியே
மகரந்தம். (083)
எல்லா
ஆறுகளும்
கடலில்தான்
சங்கமம் ஆகும்
ஜாதிச்
சுடுகாடு? (084)
நீரில்
வீசிய கல்
நீருள்
பாசியின் அரவணைப்பு-
தஞ்சம்
தரும் குடிசை. (085)
திரிந்த
சுண்ணாம்பும்
நீரினால்
கிண்ணம்பூ பூத்தது-
பூக்குமோ
என் யாக்கை? (086)
நீரிறை
மின்சார
நீரிலிருந்துதான்
எடுக்கிறோம்;
அட...
கொட்டைக்குள்
'விதை'. (087)
எல்லாமும்
படித்தான்
சருகுகள்
உதிர்ந்து பறந்துவிட்டன
தேர்வறையில்
மாணவன். (088)
நிறைகுடம்
சுமக்கும் இடை
உடைந்தது
குடம்,
நனைத்தது ஆடை-
நீர்மேல்
உதிர்ந்த மலர்? (089)
என்
செல்லப்பூனை
தூங்கட்டும்
என்றிருந்தேனே...
சமாதியானதே
'அடுப்பு'. (090)
நிறைகுடம்
தளும்பாது
உண்மை; பயணத்தில் கூடவா?
அலைபாய்கின்ற
'மனம்'. (091)
நிலவினில்
குளிக்கவாசை
நீருக்குள்
கண்டேன்;
இறங்கினேன்-
தலைக்குமேலே
நிலவு. (092)
பிரச்சாரமோயவில்லை
இலைகளின்
நுனியில் முரண்பாடு-
போரின்
பின் அமைதி. (093)
நிலவின்
வரவிற்குத்
தூக்கத்தை
விரட்டினேன்;
அடடே...
இன்று, அமாவாசை. (094)
என்
மனப்பாடங்களை
சரிபார்த்துக்கொண்டிருக்கிறது
புத்தக
அட்டைப்படம். (095)
நான்கு
திசை வேதம்
சந்திக்கும்
இடத்தில் பரம்பொருள்-
அலையின்
நடுவே கல். (096)
ஒதுக்கப்பட்டவைகள்
குளித்து
மீண்டும் அர்ச்சனைக்கு
வண்டுண்ட
மலர்கள். (097)
நான்கும்
இணைந்தாலும்
தனியாய்த்
தனித்திருக்கும் பெருவிரல்-
தேரில்
அச்சாணி. (098)
களையாத
மேகம்
காடும்
நாடும் கடலாயின-
அடடே....
மோக மண். (099)
நடப்பவை
எல்லாம்
உண்மையென்றே
நம்புகின்றதே-
கருத்துகள்
கருத்துரையிடுக